தனுசு - வார பலன்கள்

Update: 2022-11-10 19:56 GMT

தேர்ந்த பேச்சாற்றல் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

திங்கட்கிழமை காலை 6.21 மணி முதல் புதன்கிழமை மாலை 5.49 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பணியில் உற்சாகமாக ஈடுபட்டு அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், ஏற்கனவே செய்து கொடுத்த பணிகளில் ஏற்பட்ட குறைகளை நீக்கிக் கொடுக்க நேரிடும். கூட்டுத்தொழில் லாபத்துடன் நடைபெறும். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள்.

குடும்பத்தில் காணப்படும் குறைகளை தீர்க்க முயற்சி எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக வராத சொந்தங்கள் தேடி வரலாம். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறிது லாபம் கூடும். அன்றாட நிலவரங்களை கவனிப்பது பலன் தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை வில்வ மாலை அணிவித்து வணங்கினால் மங்கலகரமான வாழ்வு அமையும்.

மேலும் செய்திகள்