மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்
தவறுகளை மன்னிக்கும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
பல நாட்களாக தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் சுமுகமாக தீரும். தனவரவுகள் வந்து சேர்ந்தாலும், செலவுகளும் அதிகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரியின் விருப்பப்படி நிறுத்தி வைத்த வேலையை உடனடியாக செய்வார்கள். வீண் பேச்சுகளால் சக நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகலாம். சொந்தத்தொழிலில் புதிய நபரின் வேலையை விரைவாகச் செய்துகொடுக்க நேரிடும். கூட்டுத்தொழிலில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், எதிர்பார்க்கும் லாபம் குறையாது. பங்குச்சந்தையில் புதிய நபர்களின் வருகையால் முதலீடு அதிகமாகலாம். கலைஞர்கள், சகக்கலைஞர் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெற்று பணிகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், அமைதி நிலவும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.
பரிகாரம்:- தட்சிணாமூர்த்திக்கு, வியாழக்கிழமை நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும் வந்து சேரும்.