தனுசு - வார பலன்கள்

Update:2022-10-21 01:29 IST

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

வாழ்க்கையில் முன்னுக்கு வரத் துடிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். அவசியமான பணிகள் அவசரத்தை ஏற்படுத்தும். பயணங்கள் பயன் தரும். சொந்தத்தொழில் செய்பவர்கள் சோர்வின்றிப் பணியாற்றி, ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர் வருகை புத்துணர்ச்சியையும், தொழில் மேன்மையையும் தரும். தொடர்ந்து பணி வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சியளிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் புதிய தொழில் தொடங்க ஆலோசனை மேற்கொள்வர். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புகழும் வந்து சேரும். பொருள் போதுமானதாக இல்லாவிட்டாலும், புதிய வாய்ப்பில் ஈர்ப்பும், எதிர்பார்ப்பும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். சிறுசிறு தொல்லைகளும் இடம்பெறும். சுபகாரிய முயற்சிகள் தள்ளிப்போகும்.

பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று நெய் தீபமிட்டு வழிபட்டால் செல்வமும், வீரமும் சேரும்.

மேலும் செய்திகள்