சில காரியங்களில் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் திருப்தியை அடையமுடியும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, சில சலுகைகளை பெறுவீர்கள். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிக வேலைப்பளுவால் அவதிப்பட நேரலாம். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்குங்கள்.