தனுசு - வார பலன்கள்

Update: 2022-08-18 20:05 GMT

தடைகளைத் தகர்த்து முன்னேறிச் செல்வீர்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரி களின் உத்தரவுப்படி அவசர வேலையை ஓய்வின்றி செய்ய வேண்டியதிருக்கும். தொழில் நன்றாக நடைபெறும். வாடிக்கையாளர் வருகையால் வருமானம் கூடும். குடும்பம் சீராய் நடந்தாலும், சிறுசிறு பிரச்சினை தோன்றி மறையும். சுப காரியத்தை தொடங்குவீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு கருநீல மலர் மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.

மேலும் செய்திகள்