மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளில் பொறுமை, நிதானம் தேவைப்படும். கனிவான பேச்சுக்களால் காரியங்களை சாதிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்களுக்கான பொறுப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தள்ளிப்போகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், பணியாளர்களின் வேலையை கண்காணிப்பது அவசியம். புதிய தொழில் தொடங்கும் எண்ணத்தை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், சுமாரான லாபம் பெறுவார்கள். புதிய முயற்சிகளில், கூட்டாளிகளோடு கலந்து பேசி முடிவெடுங்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். பழைய கடன்களை சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற போராடுவார்கள். பங்குச்சந்தையில் ஏற்றத்தாழ்வு உண்டு.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்து வாருங்கள்.