முன்னெச்சரிக்கை குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
செவ்வாய் முதல் வியாழன் பகல் 11.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். சகோதர வழியில் பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான சிக்கல் தீரும். உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாக பணிகளில் ஈடுபட்டு, உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவர். தள்ளிவைத்த பணியொன்றை உடனே செய்ய நேரிடும். சொந்தத்தொழில் செய்பவர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றி வாடிக்கையாளரின் பாராட்டு களைப் பெறுவர். கூட்டுத்தொழிலில் போட்டியாளர்களின் எதிர்ப்பை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். சிறுசிறு பிரச்சினைகளின் இடையிலும் குடும்பம் நன்றாக நடைபெறும். கடன் தொல்லைகளால் பாதிப்பு இருக்காது. இல்லத்தில் சுப காரியங்கள் நன்றாக நடைபெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் விறுவிறுப்பாக பணியாற்றுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து, நெய் தீபமிடுங்கள்.