ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை
உழைப்பால் உயர முடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி முடியாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஒட்டி உறவாடிய நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் இணக்கம் குறையும். எதையும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கலாம்.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். கல்யாண முயற்சி கைகூடலாம். 'படித்து முடித்தும் வேலை இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். பூர்வ புண்ணியத்தின் பலனாக, சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக முடியும். பூமி விற்பனை மூலம் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்போது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது. இதனால் சுபகாரியங்கள் நடைபெறும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் ஆராக்கியத் தொல்லை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்கு வரமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும், தாய் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லமுடியாமல் தத்தளித்தவர்களுக்கும் இப்பொழுது வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். இதன் விளைவாக 'சுக்ர மங்கல யோகம்' நடைபெறுகின்றது. குருவின் பார்வை செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவது யோகம்தான். சொத்துத் தகராறுகள் அகலும். சொந்தங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். உள்ளத்தில் உறுதியோடு செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். இப்போது அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். 'இடம், வீடு இல்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது அவற்றை வாங்கும் யோகம் உண்டு. படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். பரந்த மனப்பான்மை கொண்ட சிலரால் நிரந்த வருமானத்திற்கு வழிபிறக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணங்கள் பலன்தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி தானாக கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வீடு தேடிவரும். மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்கும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 16, 17, 28, 29, 30, ஜூலை: 3, 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.