ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
அதிகாலை 5.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
ஜம்முகாஷ்மீர்,
ஜம்முகாஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டது. அதிகாலை 5.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.