'கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்' - சத்குரு ஜக்கி வாசுதேவ்

கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-22 13:03 GMT

சென்னை,

திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்து கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவில் பிரசாதமாக பக்தர்கள் மாட்டின் கொழுப்பை சாப்பிடுவது மிகவும் அருவருப்பானது. எனவேதான் கோவில்களை அரசு நிர்வாகத்திற்கு பதிலாக பக்தர்கள் எடுத்து நடத்த வேண்டும். பக்தி இல்லாத இடத்தில் புனிதம் இருக்காது. இந்து கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டிய காலம் இது" என்று பதிவிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்