முக அழகை அதிகரிக்கும் 'பேஸ் ஷீட்' மாஸ்க்
சென்சிடிவ் சருமத்தினருக்கு, சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும்.
15 Oct 2023 7:00 AM ISTமழைக்காலத்தில் தலைமுடி பராமரிப்பு
ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு, முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே, கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.
1 Oct 2023 7:00 AM ISTஅழகை அதிகரிக்கும் கடுகு எண்ணெய்
தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் பொலிவில்லாத கூந்தலுக்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும்.
17 Sept 2023 7:00 AM ISTகால்களை அழகுபடுத்தும் மீன் ஸ்பா!
மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர், அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
10 Sept 2023 7:00 AM ISTஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் மாஸ்க்
ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, அதில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
3 Sept 2023 7:00 AM ISTமுக அழகை மேம்படுத்தும் துளசி 'பேஸ்பேக்'
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.
27 Aug 2023 7:00 AM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் 'பேசியல் ஸ்டீமிங்'
ஸ்டீமிங் செய்ததன் மூலம் திறக்கப்பட்ட சருமத் துளைகளை மறுபடியும் மூடச் செய்வது முக்கியம். இதற்கு டோனர் உதவும். அது கைவசம் இல்லாவிடில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.
13 Aug 2023 7:00 AM ISTஇளமையை அதிகரிக்கும் கிளைகோலிக் அமிலம்
கிளைகோலிக் அமிலத்தில், 'கெரடோலிடிக்' என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு இழைகளை கரைக்கும். இதன்மூலம் சருமத் துளைகளை அடைத்துக்கொண்டு இருக்கும் இறந்த செல்கள், நுண்கிருமிகள் எளிதாக வெளியேறும். இதனால் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற முடியும்.
6 Aug 2023 7:00 AM ISTஎளிதாக தயாரிக்கக்கூடிய இயற்கை 'லிப் ஸ்கிரப்கள்'
ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும், மென்மையாகவும் இருக்கும் உதடுகள், உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். உதட்டில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு, கருமை போன்றவற்றை போக்கி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடியவை ‘லிப் ஸ்கிரப்கள்’.
30 July 2023 7:00 AM ISTசருமத்தின் இளமையை காக்கும் மூலிகைகள்
நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கும் மூலிகைகளில், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. பாரம்பரிய உணவுமுறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சரும பராமரிப்பிற்கும் பயன்படுகின்றன.
23 July 2023 7:00 AM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் 'ஹைட்ரா பேஷியல்'
ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும். முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும்.
2 July 2023 7:00 AM ISTசருமப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சிவப்பு சந்தனம்
கோடை வெயிலால் ஏற்படும் கருமை நீங்க சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனத்தூளுடன், காய்ச்சாத பால் சிறிதளவு, ரோஜா பன்னீர் சிறிதளவு கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.
25 Jun 2023 7:00 AM IST