அரசியலை கண்டு பயமில்லை: தவெக மாநாட்டில் விஜய் பேச்சு


LIVE
தினத்தந்தி 27 Oct 2024 9:25 AM IST (Updated: 27 Oct 2024 5:57 PM IST)
t-max-icont-min-icon

தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

Live Updates

  • 27 Oct 2024 3:16 PM IST

    *தவெக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

    *பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்

    *மாநாட்டு மேடைக்கு வரத் தொடங்கிய தவெக நிர்வாகிகள்

    *தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதிக்கும் தொண்டர்கள் - பரபரப்பு

    *லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், ஸ்தம்பித்த வி.சாலை

  • 27 Oct 2024 3:15 PM IST

    விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா  ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 

  • 27 Oct 2024 2:32 PM IST

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட கால நண்பர் விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் என்று உதயநிதி கூறியுள்ளார்.

  • தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பின
    27 Oct 2024 1:49 PM IST

    தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பின

    தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பின. தொண்டர்கள் குவிந்ததை அடுத்து மாநாட்டு நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தொண்டர்கள் தலையில் நாற்காலிகளை கவிழ்த்தபடி காத்திருக்கின்றனர்.

  • தவெக தலைவர் விஜய்க்கு  சிவகார்த்திகேயன் வாழ்த்து
    27 Oct 2024 1:45 PM IST

    தவெக தலைவர் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

    இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தவெக மாநாடு நடைபெறும் நிலையில் வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் பிரபு ஆதரவு
    27 Oct 2024 1:24 PM IST

    தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் பிரபு ஆதரவு

    ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தவெக தலைவர் விஜய்க்கு, எனது தந்தை ஆசியும் எனது ஆதரவும் உண்டு என்று நெல்லையில் நடிகர் பிரபு கூறினார்.

  • வேலை போனாலும் பரவாயில்லை...மாநாட்டிற்கு வந்த இளைஞர்
    27 Oct 2024 1:15 PM IST

    வேலை போனாலும் பரவாயில்லை...மாநாட்டிற்கு வந்த இளைஞர்

    தவெக மாநாட்டிற்கு செல்ல அலுவலகத்தில் விடுமுறை கேட்டேன், ஆனால் நிறுவனத்தில் விடுப்பு தர மறுத்தார்கள், மீறி எடுத்தால் வேலையை விட்டு நீக்குவேன் என கூறினார்கள், நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அப்படியே இங்கு வந்துவிட்டேன் என்று மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.

  • கேரவனில் தங்கிய விஜய்..
    27 Oct 2024 1:11 PM IST

    கேரவனில் தங்கிய விஜய்..

    தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி திடலுக்கு நேற்றிரவு சென்ற விஜய் கேரவனில் தங்கினார். புதுச்சேரி, விழுப்புரத்திற்கு சென்று தங்குவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் கேரவனிலேயே தங்கி மாநாட்டு பணிகளை கவனித்து ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


  • முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு
    27 Oct 2024 1:07 PM IST

    முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு

    மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தவெக மாநாடு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • தவெக தொண்டர்கள் அட்டூழியம்
    27 Oct 2024 1:03 PM IST

    தவெக தொண்டர்கள் அட்டூழியம்

    மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் விஜய்யின் பாடல்கள் முழங்க வாகனங்களின் மேற்கூரையில் ஆடியபடி இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டது காண்போரை பதைபதைக்க வைத்தது.


Next Story