விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தொடங்கியது


LIVE
தினத்தந்தி 27 Oct 2024 9:25 AM IST (Updated: 27 Oct 2024 3:52 PM IST)
t-max-icont-min-icon

தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.

கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் அவரது நெஞ்சில் குடியிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அதுமட்டுமின்றி இம்மாநாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கியுள்ளதால் மாநாடு தனிச்சிறப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

Live Updates

  • கேரவனில் தங்கிய விஜய்..
    27 Oct 2024 1:11 PM IST

    கேரவனில் தங்கிய விஜய்..

    தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி திடலுக்கு நேற்றிரவு சென்ற விஜய் கேரவனில் தங்கினார். புதுச்சேரி, விழுப்புரத்திற்கு சென்று தங்குவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் கேரவனிலேயே தங்கி மாநாட்டு பணிகளை கவனித்து ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


  • முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு
    27 Oct 2024 1:07 PM IST

    முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு

    மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தவெக மாநாடு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • தவெக தொண்டர்கள் அட்டூழியம்
    27 Oct 2024 1:03 PM IST

    தவெக தொண்டர்கள் அட்டூழியம்

    மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் விஜய்யின் பாடல்கள் முழங்க வாகனங்களின் மேற்கூரையில் ஆடியபடி இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டது காண்போரை பதைபதைக்க வைத்தது.

  • 27 Oct 2024 12:49 PM IST

    தவெக மாநாட்டிற்காக வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 10 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

  • 27 Oct 2024 12:28 PM IST

    தவெக செயல் திட்டம் - புதிய தகவல்

    ஆட்சி அமைத்தால் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தவெக செயல்திட்டம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு துறைகளில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் நிறைந்தவையாக செயல்திட்டங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

  • மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை
    27 Oct 2024 12:26 PM IST

    மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை

    விஜய் மாநாட்டுக்கு வந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்ட நபருக்கு அங்கு இருந்த மருத்துவர் குழு சிபிஆர் சிகிச்சை அளித்தனர். மாநாட்டு திடலில் காலை முதலே ஏராளமானோர் குவிந்து வரும் சூழலில் குடிநீரின்றி பலர் மயக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • 27 Oct 2024 12:18 PM IST

    தவெக மாநாட்டில் என்ன பேசப்போகிறார் விஜய்?

    தவெக மாநாட்டில் விஜய் நிகழ்த்தும் உரையில் எந்த தலைவர்கள் பற்றியும், தனிப்பட்டவர்கள் பற்றியும் தாக்குதல் எதுவும் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. ஊழலுக்கு எதிராக நிறைய கருத்துகள் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

  • தவெக மாநாட்டு திடலிலேயே அமர்ந்து மது அருந்தும் தொண்டர்கள்
    27 Oct 2024 12:13 PM IST

    தவெக மாநாட்டு திடலிலேயே அமர்ந்து மது அருந்தும் தொண்டர்கள்

    தவெக மாநாட்டு திடலிலேயே தொண்டர்கள் அமர்ந்து மது அருந்தும் காட்சி வைரலாகி வருகிறது.

  • சுட்டெரிக்கும் வெயில் - குடையாக மாறிய நாற்காலி
    27 Oct 2024 12:04 PM IST

    சுட்டெரிக்கும் வெயில் - குடையாக மாறிய நாற்காலி

    தவெக மாநாட்டு திடலில் சேர்களை தலையில் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் தொண்டர்கள் சுற்றி வருகின்றனர். மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த 50,000 இருக்கைகளும் நிரம்பின. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், தற்போதே நிரம்பி வழிகிறது. வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தலையில் சேர்களை தூக்கி நிற்கும் தொண்டர்களை பார்க்க பரிதாபமாக இருந்தது. 

  • ஒருங்கிணைப்பு குழு மீது விஜய் காட்டம்
    27 Oct 2024 11:58 AM IST

    ஒருங்கிணைப்பு குழு மீது விஜய் காட்டம்

    மாநாட்டு திடலில் கடும் வெயிலால், சேர்களை குடையாக பிடித்தப்படி தலையில் தூக்கி வைத்து தரையில் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். நீர்சத்து குறைபாட்டால் பெண்கள் பலர் மயக்கம் அடைந்த நிலையில் விஜய் நிர்வாகிகளை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மாநாட்டிற்கு சரியாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லையா? சரியாக திட்டமிடவில்லையா? ஏன் இந்த சொதப்பல்? என நிகழ்ச்சி ஒருங்கிணைபாளரிடம் விஜய் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் நடந்து வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் இருந்து தண்ணீர் பாட்டில்களை தொண்டர்கள் நோக்கி வீசிய நிர்வாகிகளை விஜய் கண்டித்தாக கூறப்படுகிறது.


Next Story