இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Dec 2024 12:57 PM IST
தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11 Dec 2024 12:25 PM IST
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மேலும் மத்திய மந்திரிகளை மட்டும் பேச அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து முழக்கமிட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
- 11 Dec 2024 12:02 PM IST
திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர்” என்று அவர் கூறினார்.
- 11 Dec 2024 11:41 AM IST
உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
- 11 Dec 2024 11:24 AM IST
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என்றும். காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- 11 Dec 2024 11:14 AM IST
வலாற்றுப் பெருமையைப் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி
150வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையைப் எல்லீஸ் பெர்ரி பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் இப்பெருமையை பெரும் 8-வது வீராங்கனை இவர் ஆவார்.
இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் 232 ஒரு நாள் போட்டிகளை விளையாடி முதலிடத்தில் உள்ளார்.
- 11 Dec 2024 10:54 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசான மின்னலுடன் கூடிய மழையுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
- 11 Dec 2024 9:54 AM IST
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்
தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று சுரங்க ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.