23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்


LIVE
23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
தினத்தந்தி 23 Dec 2024 8:59 AM IST (Updated: 23 Dec 2024 8:34 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 23 Dec 2024 12:29 PM IST

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூர நினைவு தின பேரணி நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம் என அண்ணா அறிவாலயத்தில் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • 23 Dec 2024 12:26 PM IST

    மருத்துவ படிப்பு - சிறப்பு கவுன்சிலிங் நடத்த உத்தரவு

    மருத்துவர்கள் காலியிடங்களை நிரப்ப இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கவுன்சிலிங் டிசம்பர் 30-ம் தேதிக்குள் நடந்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. லக்னோவை சேர்ந்த மருத்துவ கல்லூரி தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

  • 23 Dec 2024 12:15 PM IST

    மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்கினார். நாட்டின் வளர்ச்சி அதன் இளைஞர்கள் மூலமாகவே நிகழ்கிறது என்று கூறினார்.

  • 23 Dec 2024 12:11 PM IST

    திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஓங்கூர் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்து அதிக சத்தம் வந்ததால் ரெயிலை லோகோ பைலட் நிறுத்தினார். சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயிலால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். 

  • 23 Dec 2024 12:07 PM IST

    நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

    தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை நீதிமன்றம் வாயில் முன் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டநிலையில் நீதிமன்றங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்பட்டுள்ளது.

  • அரசு கண்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்
    23 Dec 2024 11:08 AM IST

    அரசு கண்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்

    சென்னை கோட்டூர்புரத்தில் அரசு கண்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மாணவர் ஒருவர் திருவள்ளுவரின் முழு உருவ சிலையை காவி நிறத்தில் வரைந்தது காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்டது. கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு விதமான திருவள்ளுவர் படங்களை வரைந்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

  • 23 Dec 2024 11:03 AM IST

    திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மீன்பிடி வலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

  • 23 Dec 2024 11:00 AM IST

    சேலம், நாமக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • 23 Dec 2024 10:58 AM IST

    கேரளாவிலிருந்து கொண்டுவந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடங்கியது. மருத்துவக்கழிவுகளை எடுத்துச்செல்ல 5 லாரிகள் வந்துள்ளன.

  • 23 Dec 2024 10:41 AM IST

    மதுரையில் கீழமாசி வீதி, வெத்தலைபேட்டையில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story