23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Dec 2024 10:39 AM IST
சென்னை மதுரவாயலில் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகார் குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வீட்டின் கழிவறையில் தலையில் கவர் சுற்றியபடி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.பேராசிரியர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிஎம்பிடி போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா? அல்லது த*கொலையா? என சிஎம்பிடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரகார்குமார் ஆவார். பேராசிரியர் உடன் நெருக்கமாக பழகியவர்களிடம் விவரங்களை போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
- 23 Dec 2024 10:36 AM IST
உத்தரப்பிரதேசம்: 'புஷ்பா-2' திரைப்படத்தை பார்ப்பதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வாக்குவாதத்தின் போது திடீரென ஹோட்டலின் 3வது மாடியில் இருந்து காதலி குதித்துள்ளார். காதலனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
- 23 Dec 2024 10:34 AM IST
மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசுதான் நிலுவை வைத்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
- 23 Dec 2024 10:18 AM IST
அமெரிக்காவில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை ஆண்ட்ரே டெம்ஸ்கி (28) கைது செய்யப்பட்டார். மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதால் இருவரும் வீட்டிற்கு வெளியே வந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் இருந்த குழந்தையை கொலை செய்துள்ளார் ஆண்ட்ரே.
- 23 Dec 2024 10:12 AM IST
தங்கம் விலையில் மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.56,800க்கும், கிராம் ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 23 Dec 2024 10:09 AM IST
பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு-29வது பிளாக்கில் பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பால்கனியில் நின்றுகொண்டிருந்த மோகன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். டிச.4ம் தேதி இதே பகுதியில் சையத் குலாம் நடந்து வந்த போது பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்தார். இது குறித்து பட்டினப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 23 Dec 2024 10:07 AM IST
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்கம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்று, பக்கிங்கம் கால்வாயில் மீன்பிடித்த சகோதரர்கள் மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மாயமான லோகேஷ் உடலை மீட்ட நிலையில், இரட்டையர்கள் விக்ரம், சூர்யாவை தேடும்பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
- 23 Dec 2024 10:05 AM IST
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நாளை ஆந்திர - வடதமிழகம் கடற்கரையை நோக்கி நகரும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை நோக்கி நகரும்போது டிச., 24,25ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 23 Dec 2024 9:17 AM IST
சென்னை படூரில் கைகளை பின்னால் கட்டியவாறு 33 விநாடிகளில் 25 மீட்டர் நீந்தி, 6 வயது சிறுவன் ரக்ஷன் சாதனை படைத்துள்ளார்.
- 23 Dec 2024 9:16 AM IST
கோவையில் பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியரான மணிகண்ட பிரபு என்பவருக்காக பீகாரிலிருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 குண்டுகளைப் பறிமுதல் செய்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குந்தன் ராஜ், ஹரிஷ், மணிகண்ட பிரபுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.