திருப்பதி கோவிலில் இந்த மாத திருநட்சத்திர உற்சவங்கள்


திருப்பதி கோவிலில் இந்த மாத திருநட்சத்திர உற்சவங்கள்
x

நவம்பர் 9-ம் தேதி வேதாந்த தேசிகரின் சாற்றுமுறை உட்பட பல முக்கிய ஞானிகள் மற்றும் பக்தர்களின் திருநட்சத்திர உற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானுக்கு உற்சவங்கள், விழாக்கள் என ஆண்டுமுழுவதும் பல திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இதுதவிர, ஏழுமலையானின் தீவிர பக்தர்களின் திருநட்சத்திர நாளிலும் சிறப்பு உற்சவங்கள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பகவானின் சேவையில் தன்னலமற்ற பங்களிப்பிற்காக ஒவ்வொரு பக்தரும் இன்று வரை போற்றப்படுகிறார்கள்.

அவ்வகையில், நவம்பர் மாதம் நடைபெறும் திருநட்சத்திர உற்சவங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இன்று (நவம்பர் 3) திருமலை நம்பி சாற்றுமுறை, வரும் 6-ம் தேதி மணவாள மகாமுனிகள் சாற்றுமுறை, அதைத்தொடர்ந்து நவம்பர் 9-ம் தேதி வேதாந்த தேசிகரின் சாற்றுமுறை, அத்ரி மகரிஷி, பிள்ளைலோகாச்சார்ய வர்ஷா, பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் உட்பட பல முக்கிய ஞானிகள் மற்றும் பக்தர்களின் திருநட்சத்திர உற்சவம் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி பேயாழ்வாரின் வர்ஷ திருநட்சத்திரம், நவம்பர் 11-ம் தேதி ஸ்ரீயாக்ஞவல்கிய ஜெயந்தி விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story