தமிழ் புத்தாண்டு: திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருமலை,
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தமிழ் புத்தாண்டு நேற்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. இதனையொட்டியும் மாதத்தின் 2-வது சனிக்கிழமை, நேற்று ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களாவே காணப்பட்டனர். திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாதோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆனது. அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 41 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story