அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை


அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமியில் மனதின் நிலை
x

அஷ்டமி நாளில் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படும் அதிர்வு பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என வானியல் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அமாவாசை: சூரியன், சந்திரன், பூமி மூன்றும் அமாவாசை தினத்தன்று ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது மூளையும் சமநிலையில் உள்ளது. இந்த நாள், மனிதர்களின் மனநிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. நம்முடைய செயல்பாடுகளுக்கு மூளைதான் காரணம் என்பதால் அமாவாசை அன்று மூளை சமநிலையாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் தெளிவாக சிந்தனை செய்து ஆரம்பிக்க முடிகிறது. எனவே நல்ல காரியங்களை அமாவாசையில் ஆரம்பிக்கிறார்கள்.

பவுர்ணமி: பவுர்ணமி நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும். என்றாலும் ஈர்ப்பு விசையின் தன்மை மாறுபடும். சூரியன் மற்றும் சந்திரன் பூமிக்கு இருபுறமுமாக வருகின்றன. எனவே ஈர்ப்பு விசையின் தன்மை மாறுபடுகிறது. எனவே பவுர்ணமியை நல்ல முடிவுகள் எடுக்க சிறந்த நாள் என்று கூற முடியாது.

அஷ்டமி, நவமி: அஷ்டமி நாளில் பூமியை சூரியன் ஒரு பக்கம் சந்திரன் ஒரு பக்கம் ஈர்க்கும் நிலை வருகிறது. இதனால் ஏற்படும் ஒருவித அதிர்வு பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என வானியல சாஸ்திரத்தில் கணித்து சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களின் மூளையும் ஈர்ப்புகளுக்கு உள்ளாவதால் தெளிவாகச் சிந்திக்க முடிவதில்லை. அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் எதிர்மறை எண்ணங்களை இந்த அதிர்வு நமக்குள் ஏற்படுத்தும். முக்கியமான செயல்களைச் செய்யவோ முடிவெடுக்கவோ முடிவதில்லை என்பதால் அஷ்டமி, நவமியில் நல்ல காரியங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இந்த நாட்களில் பைரவர், துர்கை, சிவ வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறி உள்ளார்கள்.


Next Story