பிரம்மோற்சவ விழா 6-ம் நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர்


தினத்தந்தி 23 Feb 2025 9:53 AM (Updated: 23 Feb 2025 11:55 AM)
t-max-icont-min-icon

பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று காலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.

திருப்பதி:

திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவ்வகையில் விழாவின் 6-ம் நாளான இன்று காலையில் அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் வசந்தோற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வாகன சேவைக்கு முன்னால் மங்கல வாத்தியங்கள் முழங்க, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Next Story