ஐப்பசி மாத பிரதோஷம்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி


ஐப்பசி மாத பிரதோஷம்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
x
தினத்தந்தி 28 Oct 2024 1:40 AM IST (Updated: 28 Oct 2024 5:51 AM IST)
t-max-icont-min-icon

4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த மாத பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஓடைகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் பக்தர்கள் கவனமாக மலையேறி செல்ல வேண்டும் எனவும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story