ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று திறப்பு


ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று திறப்பு
x
தினத்தந்தி 13 Sept 2024 9:26 AM IST (Updated: 13 Sept 2024 9:44 AM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை இன்று திறக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இன்று (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி மகேஸ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

நாளை (14-ந் தேதி) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி திருவோண பூஜை நடைபெற உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும். 16-ந் தேதி மாத வழிபாடு தொடங்கும். 21-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.


Next Story