நாகூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்

மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகை மாவட்டம் நாகூர் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா, பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 7-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 11-ம் தேதி திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
7-வது நாளான இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய சிலம்பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக பக்தி பரவசத்துடன் பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story