12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் தீர்த்தம்..!


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் தீர்த்தம்
x
தினத்தந்தி 28 Aug 2024 3:56 PM IST (Updated: 28 Aug 2024 6:06 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் கோவில் சன்னதிக்கு எதிரே சிறிது தூரத்தில் சங்கு தீர்த்த குளம் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் உள்ளது வேதகிரீஸ்வரர் கோவில். தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான இந்த கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு அம்சமும் பக்தர்களை வியக்க வைக்கும் வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

கோவில் சன்னதிக்கு எதிரே சிறிது தூரத்தில் சங்கு தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இது பெரியகுளம். இந்த தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது. சங்கு பிறக்கும் காலத்தில் இதில் நீராடுதல் மிகவும் விசேஷம்.

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி இந்த தெப்பக்குளத்தில் புனித சங்கு தோன்றியது. அதன்பின்னர் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி சங்கு தோன்றியது. கரை ஒதுங்கிய சங்கை உடனே கோவில் நிர்வாகிகள் எடுத்து வந்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைத்தனர்.

சங்கு தீர்த்த குளத்தில் ஒரு மண்டலம் (40 நாட்கள்) நீராடி மலையை வலம் வந்தால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் பாதுகாப்பு கருதி தற்போது யாரையும் நீராட குளத்துக்குள் அனுமதிப்பதில்லை.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional


Next Story