சூரியனை போற்றி வணங்கும் சாத் பூஜை


சூரியனை போற்றி வணங்கும் சாத் பூஜை
x

பெரும்பாலும் பெண்களே விரதம் இருந்து சாத் பூஜையில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.

இந்து கலாச்சாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிகவும் முக்கிய அம்சமாகும். சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக சாத் பூஜை திகழ்கிறது. பீகார், கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களாலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் சாத் பூஜை மிகவும் பிரபலமானது.

4 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. நஹாய்-காய் சடங்குடன் இப்பண்டிகை தொடங்குகிறது. இரண்டாவது நாளில் கர்னா. மூன்றாம் நாள் மாலை மறையும் சூரியனையும், நாளை காலை உதிக்கும் சூரியனையும் பக்தர்கள் வழிபடுவார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்து, வழிபடுவார்கள்.

பூஜை செய்யும் பக்தர்கள், 36 மணி நேரம் உணவு தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் கடுமையான விரதம் மேற்கொள்வார்கள். குடும்ப நலனுக்காகவும், தங்கள் குழந்தைகள் வளமாக வாழ்வதற்காகவும் சூரிய பகவானின் அருள் வேண்டி ஆண், பெண் என இருபாலரும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலும் பெண்களே இந்த விரதத்தை அனுஷ்டித்து சூரிய பகவானுக்கு பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சாத் பூஜை நாளை மறுநாள் (5.11.2024) தொடங்கி 8.11.2024 அன்று நிறைவடைகிறது.

சூரியனை வணங்கி பூஜை செய்வதால் சூரிய பகவானின் ஆற்றலால் நோய்கள் குணமடைந்து ஆரோக்கியம் பெருகும், வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கும் என்பது ஐதீகம்.


Next Story