பெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக விரும்பும் காபி
தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு அவசியமானது துல்லியமான கவனமும், சுறுசுறுப்பும்தான். காபியில் இருக்கும் ‘அடினோசின்’ என்ற கலவை, நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனால்தான் பல பெண்கள் காபி அருந்திசோர்வை விரட்டி விட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு காபி மிகவும் பிடிக்கும். காலையில் எழுந்ததும் சூடான காபி நிரம்பிய கோப்பையை முகர்ந்து பார்த்தால்தான், பலருக்கு அன்றைய நாளே நகரும். ஆண்களைவிட பெண்கள் காபியை அதிகம் விரும்புவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிரபலமான காபி ஷாப்களில் பெண்களின் வரவு, ஆண்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் பகிர்கின்றன. குறிப்பாக பெண் தொழில் முனைவோர்களிடம் காபி பருகும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இங்கே…
பெரும்பாலான பெண் தொழில் முனைவோர்கள் பரபரப்பாக இயங்கும் தன்மை கொண்டவர்கள். அவர்களுக்கென்று ஒரு இடைவெளியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், அது காபி குடிக்கும் வேளையாகத்தான் இருக்கும். காபி பருகும்போது 'அட்ரினலின்' என்ற ரசாயனம் உடலில் அதிகமாக சுரக்கும். வழக்கத்தை விடவும் அதிகமான செயல்திறனை வெளிக்காட்ட அது உதவும்.
தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு அவசியமானது துல்லியமான கவனமும், சுறுசுறுப்பும்தான். காபியில் இருக்கும் 'அடினோசின்' என்ற கலவை, நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனால்தான் பல பெண்கள் காபி அருந்திசோர்வை விரட்டி விட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள்.
நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு புத்திக் கூர்மையும், தெளிவான மனநிலையும் முக்கியமாகும். காபி பருகுவதால் அறிவுத் திறனின் வெளிப்பாடு அதிகமாக இருப்பதுடன், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடக்கும் தெளிவும், ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது. பெண்கள் காலை எழுந்தவுடன் காபி பருகுவது, அவர்களின் நாளை சிறப்பாக தொடங்க உதவுகிறது.
பெண் தொழில் முனைவோர்கள் பலர் பதற்றம் மற்றும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். காபி பருகுவதால் மனநிலை மாற்றம் ஏற்பட்டு பதற்றம் நீங்கி, மன அழுத்தம் குறைந்து தெளிவாக சிந்திக்க முடிகிறது.
காபி பருகுபவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதனால் எந்த வேலையிலும் சலிப்பில்லாமல் ஈடுபடுவார்கள். குழுவுடன் வேலை செய்யும் பொழுது, அந்தச் சூழலை கலகலப்பாக வைத்திருக்கும் திறமை அவர்களிடம் அதிகமாகவே இருக்கும். எதிலும் ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.
பாதிப்புகள்:
அளவுக்கு மீறி காபி பருகினால், அதுவே வேலையில் இருந்து திசை திருப்பி பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.
காபியின் தாக்கம் உடலில் அதிக நேரம் இருப்பதால், அன்றாட தூக்கம் தடைப்பட வாய்ப்புள்ளது. அதனால் பெண்கள் முடிந்தவரை மாலை நேரத்தில் காபி பருகுவதை தவிர்த்து விடலாம்.
காலை உணவிற்கு பதில், காபி பருகினால் உடலில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.
அதிகமாக காபி பருகுவதன் விளைவுகள் தலைவலி, மயக்கம், நீர் இழப்பு, வேகமான இதயத் துடிப்பு, சின்ன சின்ன விஷயங்களுக்கு கவலை கொள்ளுதல் முதலியவையாகும். பெண் கள் அதிகமாக காபி பருகுவதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.