இந்திய அணி வீரர்களை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2024-07-03 11:38 GMT

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் புயல் மற்றும் மழை காரணமாக இந்தியா திரும்ப முடியாமல் கடந்த இரு தினங்களாக பார்படாஸில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று இந்தியா புறப்பட்ட உள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூழ திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்றும், தொடர்ந்து மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்