தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய பெண்கள் அணி தோல்வி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.

Update: 2024-07-05 17:11 GMT

சென்னை,

தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி 4 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து முதல் டி20 ஆட்டம் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. தென் ஆப்ப்ரிக்க தரப்பில் அந்த அணியின் அதிகபட்சமாக தம்னி பிரிட்ஸ் 81 ரன்களையும், மரிஸ்னி கப் 57 ரன்களையும், கேப்டன் வோல்வார்ட் 33 ரன்களையும் குவித்தனர். இந்திய தரப்பில் பூஜா, ராதா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஷிபாலி வர்மா 18 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 46 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்துவ் அந்த ஹேமலதா 14 ரன்களை எடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜேமிமா 53 ரன்கள் சேர்த்தார். ஆனாலும், தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன் மூலம் இந்தியாவை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்