ஐ.பி.எல். மெகா ஏலம்: உள்ளூர் வீரரான அன்ஷுல் கம்போஜை ரூ. 3.40 கோடிக்கு வாங்கிய சென்னை

ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் தொடங்கியது.

Update: 2024-11-25 10:08 GMT

ஜெட்டா,

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.

இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் தொடங்கியது. இதில் முதல் வீரராக ரோவ்மன் பவலை கொல்கத்தா அணி ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

உள்ளூர் வீரரான அன்ஷுல் கம்போஜை ஏலத்தில் எடுக்க சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் சென்னை அணி ரூ. 3.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது. 

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரை ஏலத்தில் எடுக்க ஆரம்பம் முதலே மும்பை - லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய பெங்களூரு ரூ.10.75 கோடிக்கு வாங்கியது. 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான சாம் கர்ரணை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2.40 கோடிக்கு வாங்கியுள்ளது.

Live Updates
2024-11-25 12:37 GMT

ஸ்வப்னில் சிங்கை ரூ. 50 லட்சத்திற்கு மீண்டும் பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

2024-11-25 12:34 GMT

இந்திய இளம் வீரர்களான அர்ஷத் கானை ரூ. 1.30 கோடிக்கு குஜராத் அணியும், தர்ஷன் நல்கேண்டேவை ரூ. 30 லட்சத்திற்கு டெல்லி அணியும் வாங்கியுள்ளன.  

2024-11-25 12:24 GMT

இளம் வீரரான ஹிம்மத் சிங் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

2024-11-25 12:23 GMT

உள்ளூர் வீரரான ஷேக் ரசீத்தை அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. 

2024-11-25 12:20 GMT

இந்திய உள்ளூர் வீரரான ஷூபம் துபேவை ரூ. 80 லட்சத்திற்கு ராஜஸ்தான் வாங்கியுள்ளது.

2024-11-25 11:25 GMT

முஜீப் - உர் - ரஹ்மான், விஜயகாந்த் வியாஸ்காந்த், அகீன் ஹொசைன் மற்றும் அடில் ரஷீத் மற்றும் கேஷவ் மகராஜ் ஆகிய வெளிநாட்டு வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.  

2024-11-25 11:19 GMT

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான அல்லா கசன்பரை வாங்க கொல்கத்தா - பெங்களூரு அணிகள் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் பெங்களூரு பின்வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் கோதாவில் குதித்த மும்பை இந்தியன்ஸ் ரூ. 4.80 கோடிக்கு அவரை தட்டி தூக்கியது.  

2024-11-25 11:12 GMT

நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசனை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பஞ்சாப் தனதாக்கியுள்ளது. 

2024-11-25 11:11 GMT

இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பை ரூ. 8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. 

2024-11-25 11:08 GMT

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரை மும்பை ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்