இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ளார்.;
மும்பை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ரிங்கு சிங், நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரெல்.