ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

Update: 2024-07-05 10:00 GMT

Image Courtesy: @ZimCricketv

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெறாமல் இருந்தது. இதையடுத்து இதற்கு விசாரணை நடத்தப்பட்டு தற்பொழுது ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சார்ல் லாங்கேவெல்ட் ஜிம்பாப்வே அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை தென் ஆப்பிரிக்க அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

மேலும் செய்திகள்