இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த மும்பை வீர்ரகளை ஏக்நாத் ஷிண்டே நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

Update: 2024-07-05 12:16 GMT

Image Courtesy: @mieknathshinde / X

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பிரமாண்டமான பேரணி முடிந்ததும் இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் உலகக்கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த மும்பை வீர்ரகளான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோரை மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்