சாம்பியன்ஸ் டிராபி: இர்பான் பதான், கவாஸ்கர் இணைந்து தேர்வு செய்த இந்திய அணி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தாங்கள் தேர்வு செய்த இந்திய அணியை கவாஸ்கர் மற்றும் இர்பான் பதான் அறிவித்துள்ளனர்.;

Update:2025-01-14 14:20 IST

image courtesy: AFP

மும்பை,

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகின்றன.

ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ. மட்டும் இந்திய அணியை அறிவிக்க கூடுதல் அவகாசத்தை கேட்டு ஐ.சி.சி.-யிடம் முறையிட்டது. இதன் காரணமாக இந்திய அணி வரும் 18 - 19 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது உத்தேச அணியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் இணைந்து தாங்கள் தேர்வு செய்த இந்திய அணியை அறிவித்துள்ளனர்.

இர்பான் பதான் மற்றும் சுனில் கவாஸ்கர் இணைந்து தேர்வு செய்த இந்திய அணி விவரம்:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி.

Tags:    

மேலும் செய்திகள்