தொடர் விமர்சனங்கள்.. மீண்டும் பார்முக்கு திரும்ப ரோகித் எடுத்த அதிரடி முடிவு

மோசமான பார்ம் காரணமாக ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.;

Update:2025-01-14 19:15 IST

image courtesy: AFP

மும்பை,

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் அவரது கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டை தவற விட்ட அவர், அதற்கடுத்த 2, 3 மற்றும் 4-வது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இருப்பினும் அந்த போட்டிகளில் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 2 மற்றும் 4 -வது போட்டிகளில் தோல்வி கண்டது. மழை காரணமாக 3-வது டெஸ்ட் சமனில் முடிந்தது.

இதனையடுத்து சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் தானாகவே அணியிலிருந்து வெளியேறினார். இதனால் இந்த தொடர் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின. ஆனால் தான் இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவது இல்லை, கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்று ரோகித் தெரிவித்திருந்தார்.

இந்த தோல்விகளுக்கு கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சொதப்பிய ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் பார்முக்கு திரும்ப ரோகித் சர்மா அதிரடி முடிவை கையிலெடுத்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர், அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்று கூறியதன் படி ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளார்.

அதனால் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணியின் பயிற்சி முகாமில் இணைந்து அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அவர் ரஞ்சி கோப்பையில் மும்பை அணியின் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்