ஐ.சி.சி. டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்ற இந்தியர் யார் தெரியுமா..?

ஐ.சி.சி. டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் வென்றுள்ளார்.;

Update:2025-01-14 18:40 IST

image courtesy: ICC

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை அடங்கிய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

அதன்படி சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டேன் பேட்டர்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் டிசம்பர் மாத சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

அதேபோல் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனையாக அன்னாபெல் சதர்லேண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்