யார் அவர்..? - யோக்ராஜ் சிங் குறித்த கேள்விக்கு கபில்தேவ் அதிரடி பதில்
இந்திய அணியிலிருந்து தம்மை காரணம் இல்லாமல் கபில்தேவ் நீக்கியதாக யோக்ராஜ் சிங் கூறியிருந்தார்.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஒரு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவ்வப்போது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறும் யோக்ராஜ் சிங் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். இவரது இந்த கருத்து கிரிக்கெட் உலகில் பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் இது குறித்து கபில்தேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கபில்தேவ், "யார் அவர்? யாரைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?" என்று சொன்னார். அதற்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் என்று செய்தியாளர்கள் அவருக்கு தெளிவுப்படுத்தினார்கள். அதை கேட்ட கபில்தேவ் "அப்படியா? வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா?" என்று அதிரடியாக பதிலளித்தார்.