வாய்ப்புகளுக்காக இந்தியா காத்திருக்கவில்லை: இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Update: 2024-09-22 17:32 GMT

நியூயார்க்,

அமெரிக்காவின் டெலவர் மாகாணம் வில்மிங்டன் நகரில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா சென்றார். பிலடெல்பியா விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து, நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியா அமெரிக்கா இடையேயான நட்புறவு உலக நன்மைக்கானது. ஐடி தொழில் துறையில் இந்தியா கால் பதிக்கிறது. உலகின் முக்கிய பல்கலை.,கள் இந்தியா வரத் துவங்கி உள்ளன. விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்கள் அமெரிக்க சந்தைகளில் இடம்பெறும்.பசுமை ஆற்றல் உற்பத்தியில் இந்தியா முதன்மையாக விளங்குகிறது.

உலகில் உள்ள நாடுகளில் இந்தியா தான் குறைந்த அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. பாரிஸ் தட்வெப்ப கொள்கையை முதலில் இந்தியா தான் நிறைவேற்றி உள்ளது. உலக அமைதியை பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. விரைவில் இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படும். 2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும்.இந்தியா யாரையும் பின்பற்றி செல்வது இல்லை. புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கி செல்கிறது" இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்