டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சிக்கிறேன்- கமலா ஹாரிஸ்

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன் என கமலா ஹாரிஸ் கூறினார்.

Update: 2024-09-21 21:03 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்வர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ந் தேதி நடந்தது.

பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் விவாதம் நடத்த டிரம்புக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் விவாதத்தில் பங்கேற்கமாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்த நிலையில் மிச்சிகனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், "டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என கூறினார் 

Tags:    

மேலும் செய்திகள்