சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.56,720-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,090-க்கும் விற்பனை ஆகிறது.
தந்தை பெரியார் கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி - மத - ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ நீல வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் காலை 8.50 மணிக்குப்பின் மெட்ரோ ரெயில் சேவை சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவையில் கால இடைவெளி அதிகமாக விடப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெட்ரோ ரெயில்கள் மீண்டும் வழக்கம் போலஇயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரியாரின் 51வது நினைவுநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வலுவிழக்கும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
தெற்கு ஆந்திரா, வடதமிழ்நாடு கரையோரம் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி (டிச. 25-ம் தேதி காலை 8 மணிக்குள்) நேரத்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோவை: துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்து 1 மாதமே ஆன குட்டி யானையும் உள்ளதால், அதனை யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார், அவரின் உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் புகழை போற்றுவோம். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என சுயமரியாதை கோட்பாட்டை விதைத்தவர் பெரியார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பாஜக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் - துரை வைகோ
200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என அண்ணாமலை பாஜகவை சொல்கிறார். அண்ணாமலை அதிகாரி என்பதால் அவரது புள்ளிவிவரம் சரியாகத்தான் இருக்கும்; மக்கள் மீதான நம்பிக்கையில் 200 தொகுதியில் வெல்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்று எம்.பி. துரை வைகோ கூறினார்.