24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update: 2024-12-24 03:32 GMT
Live Updates - Page 5
2024-12-24 03:34 GMT

இளைஞர்களின் காயங்களில் உப்பை தேய்க்கிறது மத்திய அரசு

அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதாக மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் சமர்ப்பித்தபின் தேர்வு நடக்காவிட்டால் ஜிஎஸ்டி வீணாகும், இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது. இளைஞர்களின் காயங்களில் உப்பை தேய்க்கிறது என்று காங்.,எம்.பி.பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

2024-12-24 03:32 GMT

திருச்சி - அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமாகினர். 3 படகுகளில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாணவர்களில் ஜாகிர் உசேன் என்ற மாணவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரை தேடும் பணி தொடர்கிறது.

2024-12-24 03:32 GMT

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் வரும் ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்