கோவையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வாக்குவாதம்
மாநகராட்சி அதிகாரிகளுடன் வானதி ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை சிவானந்தா காலனி பகுதியில் பயனாளர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வானதி சீனிவாசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மக்களுக்கு செய்யக்கூடிய பணிகளை கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்துவதாக மாநகராட்சி அதிகாரியிடம் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மாநகராட்சி உதவி பொறியாளர் நடராஜன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.