இளைஞர்களின் காயங்களில் உப்பை தேய்க்கிறது மத்திய அரசு
அரசுத் தேர்வு விண்ணப்பங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதாக மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் சமர்ப்பித்தபின் தேர்வு நடக்காவிட்டால் ஜிஎஸ்டி வீணாகும், இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது. இளைஞர்களின் காயங்களில் உப்பை தேய்க்கிறது என்று காங்.,எம்.பி.பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
Update: 2024-12-24 03:34 GMT