வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Update: 2024-07-23 03:45 GMT
Live Updates - Page 4
2024-07-23 05:14 GMT

மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல்

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பல்வேறு மந்திரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2024-07-23 05:13 GMT

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

2024-07-23 04:52 GMT

நாடாளுமன்றம் சென்றடைந்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தபின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் சென்றடைந்தார். அவர் 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

2024-07-23 04:22 GMT

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்குமுன் ஜனாதிபதியை நிதிமந்திரி சந்தித்தார். 

2024-07-23 04:11 GMT

ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார். இதற்காக நிதி அமைச்சகத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன் அதன்பின்னர் அங்கிருந்து நாடாளுமன்றம் செல்கிறார்.


2024-07-23 03:46 GMT

மத்திய பட்ஜெட்

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது.

இதனிடையே, நடப்பு 2024-25ம் நிதியாண்டிற்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அமைந்தபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இதுவாகும்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா?, விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அறிவிப்புகள் இடம்பெறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி விடுவித்தல், ஒப்புதல் வழங்குதல், நிதி ஒதுக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்