லட்டு சர்ச்சை எதிரொலி; கோவில் பிரசாதங்கள் ஆய்வு - உ.பி., ராஜஸ்தான் அறிவிப்பு

உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-21 11:22 GMT

லக்னோ,

திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்படும் என அந்த மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்திலும் கோவில்களில் வழங்கப்பட்டு வரும் பிரசாதங்களின் தரம் குறித்து வரும் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக அந்த மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View


Tags:    

மேலும் செய்திகள்