ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார். இதற்காக நிதி அமைச்சகத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன் அதன்பின்னர் அங்கிருந்து நாடாளுமன்றம் செல்கிறார்.


Update: 2024-07-23 04:11 GMT

Linked news