மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது
புதிதாக பொறுப்பேற்றுள்ள மந்திரிகளுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
புதுடெல்லி,
பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய மந்திரிகள் மற்றும் 36 இணை மந்திரிகள் என 71 பேர் பதவியேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், மக்களின் முன்னேற்றத்துக்கு அயராது உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. தங்களதுசொத்துப்பட்டியலை சமர்ப்பிக்க புதிய அமைச்சர்களிடம் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.