விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்: பூஜை செய்து வழிபட்ட பிரபலங்கள்

அரசியல் பிரபலங்கள் விநாயகர் சதுர்த்தியை தங்களது வீடுகளில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2024-09-07 12:27 GMT

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே விநாயகர் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. பல்வேறு மாலைகள், கரண்சி நோட்டுகள் மஞ்சள் உள்ளிட்டவற்றால் பக்தர்களுக்கு விநாயக பெருமான் காட்சி அளித்து வருகிறார்.

மேலும், மக்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்து வருகின்றனர். அரசியல் பிரபலங்கள் விநாயகர் சதுர்த்தியை தங்களது வீடுகளில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய பிரபலங்கள்:

மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

 

ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் உள்ள தனது இல்லத்தில் விநாயகரை பல்வேறு பூஜை பொருட்கள் வைத்து பூஜித்தார்.

 

தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் அமைந்துள்ள 70 அடி உயர விநாயகர் சிலைக்கு பக்தர்கள் முன்னிலையில் ஆரத்தி காட்டி வழிபாடு செய்தார்.

 

மத்திய மந்திரி நிதின் கட்கரி, நாக்பூரில் உள்ள தனது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன்வி நாயகப் பெருமானை வழிபட்டார்.

 

மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தனது மனைவி அம்ருதாவுடன் தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகரை வைத்து வழிபட்டார்.

 

Tags:    

மேலும் செய்திகள்