மிலாது நபி ஊர்வலத்தில் தேசியக் கொடியில் பிறை - இருவர் கைது

மிலாது நபி ஊர்வலத்தில் பிறையுடன் கூடிய இந்தியக் கொடியை காட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-09-16 14:59 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் சரான் மாவட்டத்தில் மிலாது நபி ஊர்வலத்தின் போது அசோக சக்கரத்திற்கு பதிலாக பிறை நிலவு மற்றும் நட்சத்திர சின்னத்துடன் கூடிய இந்திய தேசியக் கொடியை எடுத்துச் சென்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், தேசியக் கொடி விதிகளை மீறியுள்ளதாக தெரிவித்த போலீசார், கொடியை பறிமுதல் செய்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சரான் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், "மிலாது நபி ஊர்வலத்தின் போது வாகனத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதிலாக அதன் மையத்தில் பிறை நிலவு மற்றும் நட்சத்திர சின்னத்துடன் கூடிய மூவர்ணக் கொடியைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் இன்று கோபா பஜார் பகுதியில் நடந்துள்ளது. இந்தியக் கொடி சட்டத்தை மீறியதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளது. கொடி உடனடியாக கைப்பற்றப்பட்டது... மற்ற குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்