டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் - பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், தங்கச்சங்கிலி கொடுப்பதாக பா.ஜ.க. மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.;

Update:2025-01-15 06:52 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

டெல்லியில் வரும் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பா.ஜ.க. பணம், தங்கச்சங்கிலி, சேலைகள் கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தனது அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்து விட்டது. ஏனெனில் அவர்களுக்கு எந்த தொலைநோக்கும், முதல்-மந்திரி முகமும் இல்லை. அதேநேரம் வாக்காளர்களுக்கு ஜாக்கெட்டுகள், சேலைகள், பணம், தங்கச்சங்கிலி கொடுத்து வருகிறார்கள். ஓட்டுக்காக பணமோ, பொருட்களோ கொடுக்கும் வேட்பாளர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் ஆம் ஆத்மியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டாம் என டெல்லி மக்களை கேட்டுக்கொள்கிறேன். டெல்லியில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்