எதிரில் வந்த பஸ், கார் மீது அடுத்தடுத்து மோதிய ஆட்டோ... 3 பேர் பலி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.;
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள கோட்டேகர் கிராமத்தில் உள்ள கினாவ்லி பாலம் அருகே மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒரு ஆட்டோ ,பஸ் மற்றும் சில வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள கோட்டேகர் கிராமத்தில் உள்ள கினாவ்லி பாலம் அருகே மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் அதிகாலை 4.15 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் ;-
ஆட்டோ டிரைவரின் மீது கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் சாலைப் பிரிப்பான் மீது மோதி, பாதையில் குதித்து, எதிர் திசையில் இருந்து வந்த ஒரு தனியார் சொகுசு பஸ், இரண்டு கார்கள் மற்றும் ஒரு டெம்போ மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஆட்டோ டிரைவர் உட்பட 15 பேர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.